நான் முதலில் கண்டுகளித்த திரைப்படகண்காட்சி


நான் முதலில் கண்டுகளித்த  திரைப்படகண்காட்சி







நான் எனது பாடசாலை  நாட்களில் கிரிக்கெட் , கால்பந்து,  போன்ற விளையாட்டு  போட்டிகளை அரங்கத்தில் இருந்தோ அல்லது தொலைக்காட்சி  நேரலைகளிலோ  பார்த்திருக்கின்றேன்.அன்று நான் எண்ணிப் பார்க்கவில்லை இவ்வாறானதொரு திரைப்படவிழாவினை அரங்கிலிருந்து பார்த்து  ரசிப்பேன் என்று. இன்று எத்தனையோ  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் காலை ஆறு மணி தொடங்கி இரவு ஒன்பதுவரை கல்வியில்  மட்டுமே நாட்டம் கொண்டிருக்க வேண்டும் என நினைக்கின்றனர். அவர்கள்  சிறிது  நேரம் தொலைக்காட்சி  பார்த்தால்  கூட " இதுதான் உன்  படிப்பிற்கு வராது உன் படிப்பை கவனி"என்று பாடப்புத்தகத்தையே அவர்கள் கண்முன்னே  மலையாக குவிக்கிறார்கள். ஆனால் அதையும்  தாண்டிச் தொலைக்காட்சி  நிகழ்ச்சிகள் திரைப்படம் போன்றவற்றை பற்றியும் படிக்கமுடியும். அதிலேயும் தேர்ச்சி  பெற முடியும் என்பதினையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் நான் இன்றுஇந்த அரங்கினுள் இருப்பதென்பது நான்  நினையாத ஒன்றே.என்ன  ஒரு பிரமாண்டம் எவ்வளவு  பிரமுகர்கள்,தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள்,இயக்குனர்கள், விமர்சனக்குழுவினர் என அரங்கமே நிறைந்திருந்தது.அரங்கும், அரங்கின் ஒலி ஒளி அமைப்பு முறைகளும் என்னை லயத்துப்போக வைத்திருந்தது.

படைப்பு என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல அது ஒரு மனிதனின் உள்ளத்து வெளிப்பாடு. அந்த வெளிப்பாடானது  மற்றவர்களையும்  கவரவேண்டும்  அவ்வாறு கவரவேண்டுமாயின் அதில் அறுசுவையும் இருக்க வேண்டும். சுவையோடு படைப்புக்களை கொடுப்பவனே சிறந்த இயக்குநர். இங்கே திரையிடப் படுகின்ற படங்கள்  அனைத்தும் எத்தனையோ கட்டுப்பாடுகள்,போராட்டங்கள் ,கடினவுழைப்பு அனைத்தையும் தாண்டிச் சிறந்த இயக்குனர்களால் வழங்கி வைக்கப்படுகின்றன.அதுமட்டுமின்றி இங்கு வெளிப்படுத்தப்பட்டகருப்பொருட்கள் அனைத்தும் குறிப்பிட்டு கூறக்கூடியதாக உள்ளது. ஏனென்றால் முறண்பட்ட  எதிர்பார்ப்புகளின் கீழ் மக்கள் வளர்வது என்பது எவ்வளவு கடினம் என்பதை துள்ளியமாக காட்டுகின்றது. இங்கு திரையிடப் பட்ட படங்களுள் "UNKNOWN"என்ற திரைப்படம் என்னை வெகுவாக கவர்ந்தது. இதில் முக்கியகதாபாத்திரமான நபர்திடீர் என்ன தூக்கத்திலிருந்து  விழித்துக்கொள்கிறார்.அவருக்குத் தான் எங்கிருக்கிறோம் என்பது புரியவில்லை தான் யார் என்பதும் புரியவில்லை. தன்னை தொலைபேசியை எடுத்துப்பார்கிறார்.அதிலும் அவருக்குத் தெரிந்த இலக்கங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஏதோஒரு இலக்கத்தை சுழற்றுகிறான்.மறுமுனையில் ஒரு பெண் குரல் அழைப்பை ஏற்கிறது. அவர்தன்னிலை பற்றிய அந்தப்  பெண்ணிடம் கூறுகிறார். அவளோட அவரின் பெயரை கேட்கின்றாள்.அவனுக்குத் தன் பெயர் கூட தெரியவில்லை. அவன் இருக்குமிடத்திலுள்ள பொருட்கள் பற்றி கேட்கின்றாள்.அவன் ஒவ்வொன்றாக கூறத்தொட.ங்குகின்றான். அப்போது என்ன ஆச்சரியம் அவன் கூறிய ஒவ்வொன்றும்  அவள்அறையில்அவன்கூறிய இடங்களிலிலேயே இருந்தது. இப்போது அவளுக்கு ஒன்றும் புரியவில்லை அவளது பெயர் என்ன அவள்யார்..............

வித்தியாசமான  ஒரு  கதை. இறுதிவரை அடுத்து என்ன  நிகழப்போகிறது.என்பதை பயத்துடனும் ஆர்வத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தேன்.திகில்  நிறைந்த  இசை அந்த கதைக்குள் இருந்தும் வெளியேவரவிடவில்லை .


D.F.RIBISHAN
MAPT/19/B1/25

No comments:

Post a Comment