"ONE FLEW OVER THE CUCKOO'S NEST"

                          புத்தகம் என்பது ஒரு மனிதனை வையத்துள் வாழ்வாங்கு வாழச்செய்யும்  தங்கப்பேழையாகக் காணப்படுகின்றது.மனிதனொருவன் எப்படிப்பட்டவன் என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவனுடைய புத்தகத்தை பார் என்பதிலிருந்து ஒரு மனிதனை நல்வழிப்படுத்துவது புத்தகம் என்பது மட்டும் அல்லாமல் அவனுடைய வாழ்க்கையில் பத்தகத்தின் வகிபாகம் எத்தகையது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

                         அந்தவகையிலே நான் வாசித்து ருசித்து மகிழ்ந்த புத்தகத்தில் இருந்து சிறுபகுதியை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.      " ONE FLEW OVER THE CUCKOO'S NEST" இந்த புத்தகத்தை பெரும்பாலும் அனைவரும் அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். இத்தகைய பொன் கருத்துக்கள் நிறைந்த புத்தகம் ஆனது " KEN KENSEY " என்பவரால் உலகிற்கு நல் விடயங்கள் போதிக்கும் நோக்குடன் எழுதப்பட்டது. இதில் நான் வாசித்த விடயத்தைப் பற்றிய எனது அபிப்பிராயத்தை கூறலாம் என விழைகின்றேன்.

                             " இந்த உலகமானது பலம் மிக்கவர்களுக்கே உரியதாக அமையும் . பலவீனங்களை இல்லாமல் செய்வதன் மூலம் எமது பலத்தை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம். ஒவ்வொருவரும் இந்தச் சவாலை எதிர்கொண்டேயாக வேண்டும். இயற்கையான உலகின் ஒரு சட்டமாக அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். முயல்கள் தங்கள் கலாச்சாரத்தில் தங்கள் பங்கை ஏற்றுக் கொண்டு ஓநாய்கள் வலிமையானவை என்பதை அங்கீகரிக்கின்றன. ஓநாய் இருக்கும் போது முயலானது தற்பாதுகாப்புக்காக தந்திரமாக குழியை உருவாக்கி அதனுள் மறைந்து கொண்டு தப்பி விடுகிறது. இதன் மூலமாக அது தனக்கான இடத்தை தெரிந்து நடந்து கொள்கிறது. அது ஓநாயை எதிர்ப்பதற்கு சவால் விடவில்லை. இது நியாயமானதா? இல்லையா? " என்பதே நான் வாசித்தறிந்த ஒன்றாகும்.

                         இப்பகுதியில் இருந்து அறிந்து கொள்வது என்னவென்றால் இன்றைய உலகமானது இரண்டு வகையான மனிதர்களையே உள்ளடக்கி இயங்குகின்றது.ஒன்று பலமானது மற்றையது பலவீனமானவர்கள். பலமானவர்கள் பலவீனமானவர்களை அடக்கி ஆளுகிறார்கள். உதாரணமாக அரசியலில் அரசியல்வாதிகள் பலம் மிக்கவர்களாக இருப்பதால் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். ஆனால் நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. அந்த பலவீனமான மக்கள் இணைந்து தான் பலமான அரசியல்வாதிகளை உருவாக்குகிறார்கள். மக்கள் சக்தி இல்லையென்றால் அரசியல்வாதிகள் உருவாகியிருக்க மாட்டார்கள். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் பலமானவர்கள் பலவீனமானவர்களிலேயே தங்கியுள்ளனர். அத்துடன் பலவீனமானவர்கள் ஒன்றாக இணைந்தால் பலமானவர்களை ஒனறும் இல்லாமல் செய்துவிட முடியும்.

                       உதாரணமாக மேலே குறிப்பிட்ட பகுதியையே எடுத்துக்கொண்டால் முயல் பலவீனமான விலங்கு. அதை விட ஓநாய் பலமானது. ஆனால் முயல் இல்லாமல் ஓநாயால் உயிர்வாழ முடியாது. ஏனெனில் உணவுச் சங்கிலியின்படி ஓநாயின் உணவு முயலாகவே இருக்கின்றது. உதாரணமாக புல் - முயல் - ஓநாய் .முயலானது தன்னை பாதுகாத்துக்கொள்ள தந்திரமாக தப்பித்து விடுகிறது. ஆனால் பல முயல்கள் ஒன்று சேர்ந்தால் ஓநாயை விரட்டிவிட முடியும். இந்தப் பகுதியின் மையக்கருத்து "சக்தி" ஆகும். பலமானவர்களிடம் தனிப்பட்ட ரீதியில் இருக்கும் இருக்கும் சக்தி பலவீனமானவர்களிடம் ஒன்றாக இணைவதால் ஏற்படுகிறது. இதை உணர்ந்து நடந்து கொண்டால் பலவீனமானவர்களும் பலமானவர்களாக பலமானவர்களாக மாறமுடியும்.

                      எனது கருத்தின்படி இன்றைய உலகத்தில் இது இயற்கையானது தான். ஆனால் பலமானவர்களுக்கும் சவால்விட கூடியவாறு பலமானவர்கள் இருக்கின்றார்கள். உதாரணமாக புல் - முயல் - ஓநாய் - சிங்கம் இதனை கூறலாம். பலமான ஓநாயானது அதனை விட பலமான சிங்கத்திடம் பயந்து அடிபணியும். அது போல் மனித வாழ்க்கையிலும் மேற்கூறிய விலங்குகளுக்கு ஒப்பான மனிதர்கள் இருக்கின்றார்கள். ஒருவருடைய பலமானது அவருக்குள்ளேயே இருக்கின்றது. அதை வெளியே கொண்டு வரும் போது அவர்களும் பலமுடையவர்கள் ஆகிறார்கள். அத்துடன் ஒரு குழுவாக இணையும் போது அப்பலம் இரட்டிப்பாகின்றது. ஆகவே நாம் எப்போதும் ஒற்றுமையாக இருந்தால் யாராக இரந்தாலும் எதிர்க்க முடியும். இன்றையகால கட்டத்தில் இதற்கான சந்தர்ப்பம் அதிகமாகவே உள்ளன. ஏனெனில் பலமானவர்கள் பலவீனமானவர்களை அடக்கி ஆளுவது இன்று எல்லா இடங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் இது காட்டுக்குத்தான் பொருந்தும் நாட்டுக்குப பொருந்தாது. ஆகவே நாம் ஒவ்வொருவரும் அதை உணர்ந்து கொண்டு நமது பலத்தை வெளிப்படுத்தி ஒவ்வொருவரும் பலமானவர்களாக மாற முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு மாறும்போது பலவீனமானவர்கள் என்ற சமுதாயத்தை இல்லாது ஒழிக்கலாம்....

              $$  நன்றி $$

K.URUTHIRAKUMAR
MAPT/19/B1/15
                        

No comments:

Post a Comment