இலங்கையின் அடுத்த ஜனாதிபதியும் நாங்களும்...
ஜனாதிபதி என்பவர் இலங்கை நாட்டை தனது ஆளுமைத்திறமையால் அனைத்து இன மக்களையும் ஒரே குடையின் கீழ் சமத்துவத்தின் வழியே ஆழக்கூடியவராக இருக்கவேண்டும்.அதுமட்டுமல்லாமல் அண்மையில் இடம்பெற்ற ஐஸ்.ஐஸ் தீவிரவாத கும்பலால் எமது நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை கூறலாம். ஏனென்றால் இந்த குண்டுவெடிப்பு நடைபெறப் போகிறது என அரசாங்கத்தின் சில முக்கிய பிரதிநிதிகளுக்கு தெரிந்த போதிலும் அதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை எடுத்திருந்தால் பச்சிளம் குழந்தைகள் இறந்திருக்கமாட்டார்கள் எனவே ஒரு ஜனாதிபதி என்பவர் தனது சுயநலத்தை விடுத்து எந்நேரமும் மக்களைப் பற்றியே சிந்திக்க வேண்டும் மக்களின் நலனிலேயே அக்கறையாக இருக்கவேண்டும். மேற்குறிப்பிட்ட தகுதியுடன் இருந்திருந்தால் இவ்வளவு உயிரிழப்பு ஏறபட்டிருக்காது. அத்தோடு நாட்டல் பிரச்சினைகள் எதும் எழுந்தால் அரசியல்பிரதிநிதி என்றோ அல்லது தனது குடும்ப உறவினர் என்றோ செயற்படாமல் பக்கச்சார்பின்றி செயற்பட வேண்டும்.மேலும் அனைத்து பிரச்சினைகளையும முகம்கொடுத்து தீர்க்ககூடியவராக இருக்க வேண்டும். அனைத்து மக்களையும் மனிதாபிமான அடிப்படையில் மகங்கொடுக்க வேண்டும்.மக்கள் கூறுவதையோ அல்லது மக்களின் பிரச்சினைகளையோ கூறினால் நியாயமானவற்றை செவிசாய்க்க வேண்டும் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அபிவிருத்தி என்பது யாதெனில் பாமர மக்களிடமிருந்து தொடங்கி அவர்களது வாழ்க்கையின் அன்றாட வாழ்வின் மனிதவாழ்விற்கு தேவையான உணவு சுகாதாரம் கல்வி போன்றவை எந்தவித பாகுபாடின்றி கிடைக்கப்பெற வேண்டும்.இதன்படி முன்னாள ஜனாதிபதியால் அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான அபிவிருத்தியை கூறலாம். அதாவது வத்தளை விமானநிலையம். அம்பாந்தோட்டை துறைமுகம் . அதிவேக பாதைகள். போன்றவை நனமையான விடயமாக இருந்தாலும் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் இன்றி மேற்கொள்ளப்பட்டமையால் தற்போதைய அவையின் நிலமை என்னவென்றால் விமானங்கள் அற்ற விமானநிலையமாக வத்தளை விமானநிலையமும் கப்பலற்ற துறைமுகமாக அம்பாந்தோட்டை துறைமுகமும் வாகனங்களற்ற அதிவேகப்பாதைகளும் அம்பாந்தோட்டையில் காணப்படுகிறது. இந்த நிதியினை பாமர மக்கள் கல்விக்காக வழங்கியிருந்தால் கல்வி கற்கும் பாடசாலை இல்லாமல் உள்ள பிள்ளைகள் பாடசாலையும் நீர் வசதியில்லாத கிராமங்களுக்கு நீர வழங்கும திட்டத்தையும் வழங்கியிருந்தால் எமது நாடு எப்போதோ அபிவிருத்தி அடைந்திருக்கும். இவ்வாறான திறமையே நாட்டைஉயர்த்தும் இத் திறமைகளையே எதிர்பார்க்கின்றோம்.....
..நன்றி..
K.URUTHRAKUMAR
MAPT/19/B1/15
No comments:
Post a Comment