2019 இலங்கை அரசுத்தலைவர் தேர்தல் (2019 Sri Lankan presidential election) இலங்கையின் 7-வது நிறைவேற்று
அதிகாரம் கொண்ட அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுக்க 2019 நவம்பர் 16 இல் நடைபெற்ற
தேர்தல் ஆகும். நடப்பு அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவின்
பதவிக்காலம் 2020 சனவரி 9 இல் முடிவடைய இருந்த நிலையில், தேர்தல் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இலங்கை தேர்தல்
வரலாற்றில் முதல் தடவையாக நடப்பு அரசுத்தலைவர் ஒருவரோ, பிரதமர் ஒருவரோ அல்லது எதிர்க்கட்சித் தலைவர்
ஒருவரோ அரசுத்தலைவராகப் போட்டியிடுவதைத் தவிர்த்தனர்.

2019 நவம்பர் 17 இல்
அதிகாரபூர்வமான இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, இலங்கை பொதுசன முன்னணி வேட்பாளர் கோட்டாபய
ராஜபக்ச 52.25% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஐக்கிய
தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 41.99% வாக்குகளைப்
பெற்றார்.கோட்டாபய ராசபக்ச இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் வடக்கு,
கிழக்கு மாகாணங்களின்
ஐந்து மாவட்டங்கள், மலையகத்தின்
நுவரெலியா மாவட்டம் ஆகியவை தவிர்ந்த ஏனைய 16 மாவட்டங்களிலும்
பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கோட்டாபய ராசபக்ச 2019 நவம்பர் 18 அன்று அதிகாரபூர்வமாக
இலங்கையின் 7-வது அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
இலங்கை
அரசுத்தலைவர் (ஜனாதிபதி) விருப்பு வாக்கு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
வாக்காளர்கள் அதிக பட்சம் மூவருக்குத் தமது விருப்பு வாக்குகளை இடலாம். குறைந்தது 50%
இற்கும் அதிகமான
வாக்குகள் பெற்றவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். முதற்கட்ட வாக்கெடுப்பில்
எவரும் 50% இற்கும் அதிகமான
வாக்குகள் பெறத் தவறினால், அதிக வாக்குகள்
பெற்ற இரண்டு வேட்பாளர்கள் இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்குத் தெரிவு
செய்யப்படுவர். இரண்டாம் கட்டப் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட வேட்பாளர்கள்
பெற்ற வாக்குகளில் இருந்து 2-ஆம், 3-ஆம் விருப்பத் தெரிவாக இரண்டாம் கட்டப்
போட்டியில் நிற்கும் இரண்டு வேட்பாளர்களுக்குமுரிய வாக்குகள் எண்ணப்பட்டு
அவர்களின் முதலாம் கட்ட எண்ணிக்கையுடன் கூட்டப்பட்டு, அதிக வாக்குகள் பெறுபவர் வெற்றியாளராகத்
தீர்மானிக்கப்படுவார்.
வரலாற்றில் முதல்
முறையாக அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிட்ட அரசுத்தலைவர் தேர்தல் இதுவாகும்.
மொத்தம் 35 வேட்பாளர்கள்
போட்டியிட்டனர். கட்சி சார்பாகத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் ரூ.50,000 உம் சுயேட்சையாகப் போட்டியிடுபவர்கள் ரூ.75,000
உம் கட்டுப்பணங்களாக
செலுத்த வேண்டும். கட்டுப்பணங்களைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் ஆகக்குறைந்தது 5%
வாக்குகளைப் பெற்றிருக்க
வேண்டும். போட்டியிட்டவர்களில் கோத்தாபய ராசபக்ச, சஜித் பிரேமதாச தவிர்ந்த ஏனைய 33 பேரும் தமது கட்டுப்பணங்களை இழந்தனர்.
D.F.RIBISHAN
MAPT/19/B1/25
MAPT/19/B1/25
Article is super
ReplyDelete